tamilnadu

img

ஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி சாமியார்... தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் குற்றச்சாட்டு

போபால்:
ஜக்கி வாசுதேவ் ஒரு மோசடி சாமியார் என்று ‘மகசேசே’விருதுபெற்ற ‘தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் விமர் சித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ‘நீர் உரிமைச்சட்டம் குறித்த கருத்தரங்கம்’ நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு ராஜேந்திர சிங் மேலும் பேசியிருப்பதாவது:ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைச் செய்வதை விட்டுவிட்டு, சாமியார் ஜக்கிவாசுதேவ் போன்றவர்கள் ‘காவிரிக்கு குரல் கொடுப்போம்வாருங்கள்’ என்று அழைப்பதெல்லாம் மோசடி. ஜக்கி வாசுதேவ் வேண்டுமானால் தன்னைத்தானே ‘சத்குரு’ என்று அழைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்ஒரு மோசடி சாமியார். கோயம்புத்தூர் விவசாயிகளுக்கு வினோபாவே-யின் பூமிதான இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை ஜக்கி வாசுதேவ் அபகரித்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் உள்ளது. சொந்த மனைவியையே கொலை செய்தவர் அவர்.ஜக்கி போன்ற சாமியார்களால் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்க முடியாது. நதி நீர் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. ஆடம்பரம், அதிகாரம் ஆகிய இரண்டையும் மட்டுமே நம்பும் இந்த சாமியார்களுக்கு, எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது. இவ்வாறு ராஜேந்திர சிங்பேசியுள்ளார். இந்நிலையில், தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங், ஜக்கிவாசுதேவ் கூறும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், பொய்மற்றும் அவதூறு என்று ‘ஈஷா அறக்கட்டளை’ மறுத்துள்ளது.

;